மரத்தில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட விமானப்படை வீரர் தொடர்பில் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்
கடத்திச் சென்று மரங்களைக் கட்டிக் கொல்ல முயன்றதாகக் கூறப்படும் விமானப்படை சிப்பாய் ஒருவரின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மட்டக்களப்பு, இலங்கை விமானப்படை முகாமில் கடமையாற்றும் இந்த கோப்ரல்இ நேற்று (28) காலை வாழைச்சேனை, ரிதிதன்ன பிரதேசத்தில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு, பிரதேசவாசிகளால் வாழைச்சேனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் குறித்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த இடத்தில் தமிழில் எழுதப்பட்ட பலகையையும் பொலிசார் கண்டுபிடித்தனர், அதில், “கொடூரமான அரசியலுக்கு உதவி செய்பவர்களை இப்படித்தான் கொல்கிறார்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.
இது ஏதோ ஒரு குழுவால் ஏற்பட்ட குழப்பம் இலலை. வேறு ஏதோ நடந்துள்ளது என்பதை பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.
இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், அதில், விடுமுறைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த தன்னை வேனில் கடத்திச் சென்று மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்ய முயற்சித்ததாக விமானப்படை சிப்பாய் தெரிவித்துள்ளார்.
தகவலில் உள்ள முரண்பாடுகளால்இ தமிழ் மொழியில் எழுதப்பட்ட பலகை குறித்தும் சந்தேகம் எழுந்தது
தமிழ் மொழி சரியாக தெரியாத ஒருவரால் எழுதப்பட்டது என்பது புரிகிறது.
விசாரணையில், அவரே இந்த செயலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொடர் விசாரணையில் அது போலியான நடிப்பு என்பதை விமானப்படை சிப்பாய் ஒப்புக்கொண்டார்.
இந்த விமானப்படை கோப்ரல் இணையத்தில் கணினி விளையாட்டிற்கு அடிமையாகி, அதற்காக அவ்வப்போது கேம் விளையாடியுள்ளார்.
சில சமயங்களில், தளத்தில் உள்ள சக விமானப்படையினரிடமும் பணம் வாங்கியுள்ளார்.
முதலில் பணத்தை திருப்பி கொடுக்காமல் தற்கொலை செய்து கொள்ள எண்ணிய அவர்இ பின்னர் மனம் மாறியுள்ளார்.
ஏனெனில் அவர் தற்கொலை செய்து கொண்டால் அவரது மனைவிக்கு விமானப்படை மூலம் கிடைக்கும் பலன்கள் கிடைக்காது எனவும் தனது உடைமைகள் அனைத்தும் திருடப்பட்டது போல் காட்டி கடன் கொடுத்தவர்களிடம் இருந்து நிவாரணம் பெற தனியாக திட்டமிட்டு இந்த செயலை செய்துள்ளார்.
தமிழில் தவறுதலாக பலகை எழுதி தன்னை மரத்தில் கட்டிக்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதற்கமையஇ இந்த கோப்ரல் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.