கொழும்பு வாழ் மக்களுக்கு விசேட அறிவிப்பு
கொழும்பு மாநகர எல்லையில் கடமைக்காக வருபவர்கள் மற்றும் கொழும்பு நகர எல்லையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருப்பவர்கள் என அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற் கொண்டு அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
கொழும்பு நகர எல்லையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் வேலைக்காகச் செல்லும் சிலர் முகக் கவசம் அணியாமல் நடந்து செல்வது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு நகர எல்லையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் சிலர் முகக்கவசம் அணிவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகர எல்லைக்குள் கொரோனா தொற்று வேகமாகப் பரவும் அபாயம் உள்ளதால், முகக் கவசம் அணிதல், கைகளை சவர்க்காரத்தினால் கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறும் அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.