ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை குறித்து சஜித் வெளியிட்ட கருத்து!

Reha
2 years ago
ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை குறித்து சஜித் வெளியிட்ட கருத்து!

மனிதாபிமானம் கொண்ட, மக்கள் மனதை வென்ற அரசியல்வாதியான ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு கிட்டிய நாட்களில் பூரண சுதந்திரம் கிடைக்கும் என தானும் அனைத்து அரசியல்வாதிகளும் மற்றும் சகல இலங்கையர்களும் எதிர்பார்த்துள்ளனர் என வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நேற்று (30) பார்வையிட சென்ற போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நீண்ட நாட்கள் செல்வதற்கு முன் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு பூரண சுதந்திரம் கிடைக்கும் என தான் எதிர்பார்பார்ப்பதாகவும், அந்நாள் வரும் வரை காத்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அவர் ஓர் உண்மையான மனிதாபிமானி என்பதோடு ஒரு மக்கள் சார் கலைஞராகவும் மகத்தான பணிகளை நிறைவேற்றியுள்ளார்.

மனிதாபிமான மிக்க அரசியல்வாதிவாதியும், மக்கள் சார் கலைஞராகவும் தொடர்ந்து மக்கள் செல்வாக்குள்ள பிரபலம் மிக்க ரஞ்சன் ராமநாயக்க, சுதந்திர குடிமகனாக சமூகத்திற்குத் திரும்பி, உறுதியுடன் சமூக நீதிக்காக பாடுபடுவதை பார்ப்பதை ஒரே நோக்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!