மற்றுமொரு எரிவாயு கப்பல் இலங்கை வருகின்றது – லிட்ரோ நிறுவனம்
Prabha Praneetha
2 years ago
மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (31) இரவு நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்ததாகவும், தரையிறங்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பல்வேறு பகுதிகளில் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கான வரிசை முறை முடிவுக்கு வந்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியான எரிவாயு விநியோகத்திற்காக ஒரு இலட்சம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.