சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால் கடும் அதிருப்தியில் இந்தியா

Prabha Praneetha
2 years ago
சீன இராணுவ கண்காணிப்பு கப்பலால் கடும் அதிருப்தியில் இந்தியா

சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பலான யுவான் வோங் – 5 இன் இலங்கை விஜயம் தொடர்பில் இந்தியா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த கப்பலின் வருகை மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட்டு அந்த காலப்பகுதியில் மேற்கொள்ளவுள்ள செயற்பாடுகள் என்ன என்பன குறித்து முழுமையான தெளிவுப்படுத்தலை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

சீன இராணுவ கண்காணிப்பு மற்றும் ஆய்வு கப்பலின் வருகையானது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயங்களில் நேரடியாகவே தாக்கம் செலுத்துகின்றமையால் இந்த விடயத்தில் முழுமையான அவதானத்துடன் இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

யுவான் வோங் – 5 இராணுவ கண்காணிப்பு கப்பல் எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதி இரவு 11 மணிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளது.

ஜியாங்கியின் துறைமுகத்திலிருந்து கிழக்கு சீன கடல் ஊடாகவே யுவான் வோங் – 5 கப்பல் இலங்கை நோக்கிய பயணித்தை ஆரம்பித்துள்ளது.

செயற்கைக்கோள் மற்றும் அதி நவீன செய்மதி தொழில்நுட்பத்தில் யுவான் வோங் – 5 கப்பல் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!