சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படும் - ரணில்

Prabha Praneetha
2 years ago
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படும் - ரணில்

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) செய்துகொள்ளும் உடன்படிக்கை இலங்கையின் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை தனது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வழிகளைப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கண்டியில் நேற்று உரையாற்றிய ஜனாதிபதி, இந்த போராட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் சாத்தியமான உடன்படிக்கையை தாமதப்படுத்தியதாக தெரிவித்தார்.

பிரதமராக பதவியேற்ற பிறகு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக அவர் கூறினார். எனினும், கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட ஸ்திரமின்மையால் பேச்சுவார்த்தைகள் தடைபட்டதாக அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!