தேசிய எரிபொருள் அனுமதி அட்டை! நாளை முதல் நடைமுறை
Prabha Praneetha
2 years ago
தேசிய எரிபொருள் அனுமதி அட்டை நாளை முதல் நடைமுறைக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறும் பொதுமக்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை என்ற QR முறைமைக்கு இன்று முதல் வாகன வருமான அனுமதி பத்திரத்தை கொண்டு பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.