4 பில்லியன் ரூபா கையிருப்பில் இரு ஆண்டுகளாக எவருக்கும் உதவாத கோட்டாபய

Kanimoli
2 years ago
4 பில்லியன் ரூபா கையிருப்பில் இரு ஆண்டுகளாக எவருக்கும் உதவாத கோட்டாபய

ஜனாதிபதி நிதியத்தில் நான்கரை பில்லியன் ரூபா கையிருப்பில் இருந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த நிதியத்தின் மூலம் எவருக்கும் எந்த பிரதிபலனும் வழங்கப்படவில்லை என தெரியவருகிறது.

அவசர சத்திர சிகிச்சைக்காக பணத்தை ஈட்ட முடியாத மக்களுக்கு நிதியுதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியத்தின் நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி நிதியத்திற்கு நிதியுதவி கோரிய சுமார் ஏழாயிரம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. விண்ணப்பத்தவர்களில் எவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நிதியுதவி வழங்கப்படவில்லை என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

நிதி நிவாரண உதவிகள் தேவைப்படுவோருக்கு நிவாரணத்தை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதியை மீண்டும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி நிதியத்திடம் இருந்து நிதியுதவிகளை பெற எதிர்பார்த்துள்ள மக்கள் இணையத்தளம் ஊடாக அதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக எவருக்கும் நிதியுதவிகளை வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!