கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பெருந்தொகை எரிபொருள் மீட்பு
Prabha Praneetha
2 years ago
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்த 33 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று காலை 6 மணி முதல் இன்று (31) காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்ட 31 விசேட சுற்றிவளைப்புகளில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 1,108.9 லிட்டர் பெட்ரோல், 1,441 லிட்டர் டீசல், 9 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றை பொலிசார் பறிமுதல் செய்தனர்.
இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 1,220 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.