2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி- 100m ஓட்டப்போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற யுபுன் அபேயக்கோன்
Prasu
2 years ago
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், தற்போது முடிவடைந்த ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேயக்கோன் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
10.14 செக்கன்களில் போட்டித் தூரத்தை அபேயக்கோன் கடந்திருந்தார்.
இந்நிலையில், பந்தயத்தை 10.02 செக்கன்களில் கடந்த கென்யாவின் பேர்டினான்ட் ஒமன்யாலா தங்கப் பதக்கத்தை வென்றதுடன், பந்தயத்தை 10.13 செக்கன்களில் கடந்த தென்னாபிரிக்காவின் அகனி சிம்பைன் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார்.