QR முறை பற்றி விசேட கலந்துரையாடல்
Prathees
2 years ago
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் கீழ் QR அமைப்பின் ஊடாக எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த QR அமைப்பை மேலும் மேம்படுத்துவது எப்படி என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
இயந்திரங்கள் மற்றும் ஏனைய சேவைகளுக்கான எரிபொருளை வழங்குவதற்கு QR முறைமையைப் பயன்படுத்துவதிலும், ஒரு வாரத்திற்குள் மாற்று வழியை வழங்குவதிலும் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.