சர்வ கட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவி ஏற்பது தொடர்பில் சி.வி விக்னேஸ்வரன் ஆராய்வு!
Mayoorikka
2 years ago
தமிழ் மக்கள் சார்பில் தாம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியினை ஏற்பது குறித்து ஆராயவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக ஆதரவு வழங்குமாறு சகல கட்சிகளுக்கும் எழுத்து மூல அழைப்பை ஜனாதிபதி விடுத்திருந்தார்.
இந்தநிலையில், ஜனாதிபதி தெரிவின் போது, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கிய சி.வி.விக்னேஸ்வரன் சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவியை ஏற்றுக்கொள்வாரா? என்பது தொடர்பில் வினவிய போது .
தமிழ் மக்கள் தொடர்பான தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே, சர்வகட்சி அரசாங்கத்தில் அமைச்சுப்பதவியினை ஏற்பது குறித்து ஆராய முடியும் என தெரிவித்தார்