கைப்பற்றப்பட்ட எரிபொருள் மீண்டும் ஒப்படைப்பு
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திலிருந்து கைப்பற்றப்பட்ட எரிபொருள் மீண்டும் பிரதேச செயலகத்திற்கே பொலிஸாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலுக்கமைய, கடந்த சனிக்கிழமை இரவு பிரதேச செயலகம் உள்ளிட்ட வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 10 லிட்டர் பெட்ரோல், 10 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 50 லிட்டர் டீசல் ஆகியன கைப்பற்றப்பட்டன.
எவ்வாறாயினும், இவை பிரதேச செயலகத்தின் தேவைக்கே வைக்கப்பட்டிருந்ததாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கைப்பற்றப்பட்ட எரிபொருள் தொகை, பிரதேச செயலகத்தின் தேவைக்காக வைக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், குறித்த எரிபொருள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.