பேருந்து கட்டணம் 11.14% குறைக்கப்பட்டது! குறைந்தபட்ச கட்டணம் ரூ.34

Prathees
2 years ago
பேருந்து கட்டணம் 11.14% குறைக்கப்பட்டது! குறைந்தபட்ச கட்டணம் ரூ.34

டீசல் விலை குறைவினால் பஸ் கட்டணம் நேற்று (04) நள்ளிரவு முதல் 11.14 வீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் நிலான் மிராண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணம் 38 ரூபாயில் இருந்து 34 ரூபாவாக குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோவிட் தொற்றுநோய்களின் போது அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி குறித்த குறைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த குறைப்பு தனியார் மற்றும் வழக்கமான சேவைகளுக்கு பொருந்தும் மற்றும் நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு பொருந்தாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.