ஜனாதிபதி ரணிலின் வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் 205 மில்லியன் – நீதிமன்றில் CID அறிக்கை

Prathees
2 years ago
ஜனாதிபதி ரணிலின் வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் 205 மில்லியன் – நீதிமன்றில் CID அறிக்கை

ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீக்கிரையாக்கப்பட்டதால் அந்த வீட்டுக்கு 14 மில்லியன் ரூபா நஷ்டமும்இ ரணில் விக்கிரமசிங்கவின் பாவனைக்காக வழங்கப்பட்ட காருக்கு 191 மில்லியன் ரூபா நஷ்டமும் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (10ஆம் திகதி) கோட்டை நீதவான் திலின கமகேவிடம் இதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்

குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவரது கைரேகைகள் அடையாளம் காணப்பட்டு, ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக அரசாங்கச் சுவையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

நான்காவது சந்தேகநபரின் கைத்தொலைபேசியில் பல காணொளிகள் மற்றும் ஒலிப்பதிவுகள் காணப்பட்டதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் தீ வைக்கப்பட்ட வீட்டிற்கு அருகாமையிலும் வீதியிலும் அமைந்துள்ள ஏழு நிறுவனங்கள் மற்றும் வீடுகளின் சிசிடிவி காட்சிகளை வழங்குமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.