சீனக் கப்பல் இன்று ஹம்பாந்தோட்டைக்கு
Prathees
2 years ago
சீன யுவான் வாங்-5 கப்பல் இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பலின் இலங்கைக்கான பயணத்தை ஒத்திவைக்குமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்த போதிலும், கப்பலின் பயணம் நிறுத்தப்படவில்லை.
சீனக் கப்பல் இலங்கைக்கு செல்வது குறித்து இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளது, இது சீன ராணுவத்துக்கு சொந்தமான உளவு கப்பல் என்று கூறுகின்றனர்.
இந்தியாவின் ஆட்சேபனை காரணமாக, இந்த கப்பலின் பயணத்தை ஒத்திவைக்க இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது.
இந்தக் கப்பல் இந்தோனேசியக் கடலில் மணிக்கு 26 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
யுவான் வாங்-5 கப்பலில் 400 பணியாளர்கள் உள்ளதாகவும், மற்ற தரப்பினர் கப்பலின் பயணம் குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் பெய்ஜிங் அரசு தெரிவித்துள்ளது.