யாழில் எரிபொருள் பெற காத்திருந்த இளம் குடும்பஸ்தர் பலி

Kanimoli
2 years ago
யாழில் எரிபொருள் பெற காத்திருந்த இளம் குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (10) பெட்ரோல் பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சிவசோதிலிங்கம் சொரூபன் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர்  QR குறியீட்டை காண்பித்து தனது மோட்டார் சைக்கிளுக்கான பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தினுள் சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளுடன் மயங்கி விழுந்துள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை வைத்திய சாலையில் அனுமதித்த போதும், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது

ஆரம்ப கட்ட வைத்திய பரிசோதனைகளின் அடிப்படையில் உயிரிழப்புக்கு மாரடைப்பே காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!