முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த ஹரக் கட்டா துபாயில் கைது

Prathees
2 years ago
முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த ஹரக் கட்டா துபாயில் கைது

ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக டுபாய் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசியா செல்லவிருந்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கு ஹரக் கட்டா தவிர அவருக்கு ஆதரவான மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் அவரது மனைவியும் ஒருவர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரக் கட்டா நாட்டில் ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவர்.

இந்த நாட்டில் நடந்த பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் அவர் ஈடுபட்டதாக கூறப்பட்டது. 

ஹரக் கட்டாவின் கைது தொடர்பில் சிறிலங்கா பொலிஸாருக்கு இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!