பொதுமக்களிடம் சுப்பர் மார்க்கெட்களில் மோசடி நடவடிக்கை

Kanimoli
2 years ago
பொதுமக்களிடம்  சுப்பர் மார்க்கெட்களில் மோசடி நடவடிக்கை

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் உணவு பொருட்களின் விலைகளால் பாதிக்கப்படும் பொதுமக்களிடம்  சுப்பர் மார்க்கெட்களில் மோசடி நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணெய் விலை உயர்வு மற்றும் டொலரின் மதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொருட்களின் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளது.

இருந்தபோதிலும், அரிசி, சீனி, பருப்பு, பிஸ்கட், சவர்க்காரம், பட்டர், இனிப்பு பானங்கள், பால் மா, திரவ பால், கோழி இறைச்சி, முட்டை போன்றவற்றின் விலைகள் சுப்பர் மார்க்கெட்களில் நியாயமற்ற முறையில் மிக அதிகளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயத்தில் சுப்பர் மார்க்கெட் பொருட்களுக்கு விலைக் கட்டுப்பாடு இல்லை எனவும், வர்த்தக அமைச்சரும் நுகர்வோர் அதிகார சபையும் மௌனம் காப்பதாக, மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் முன்னர் விற்பனை செய்யப்பட்ட பொருட்களை அதிக விலையிலான ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்யும் மோசடி நடவடிக்கை ஒன்று  முன்னெடுக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் காணொளி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.

இந்த மோசடி நடடிக்கை குறித்து வர்த்தக அமைச்சர் அல்லது நுகர்வோர் அதிகார சபை கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!