மின்சாரக் கட்டண உயர்வினால் 50000 கோடி வருமானம்

Kanimoli
2 years ago
மின்சாரக் கட்டண உயர்வினால் 50000 கோடி வருமானம்

மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் ஊடாக இலங்கை மின்சார சபையின் வருமானம் மாதாந்தம் 50000 கோடி ரூபாவினால் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்பொழுது இலங்கை மின்சார சபை மாதாந்தம் 60000 கோடி ரூபா வரையில் நட்டமடைந்து வருகின்றது.

தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட காரணிகளினால் ஆண்டு தோறும் மின்சார சபை அடையும் நட்டம் அதிகரித்துச் செல்கின்றது.

இதேவேளை, மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மின்சாரக் கட்டணங்களை செலுத்துவதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு கைத்தொழில்துறை மற்றும் வர்த்தகதுறை போன்றவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட பணியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!