9,000 புள்ளிகளை கடந்த கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை
#SriLanka
Prasu
2 years ago
கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 9,027.48 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 321.31 ஆக இன்று பதிவாகியுள்ளது.
மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.33 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டில் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 9,000 புள்ளிகளை கடந்துள்ள முதல் முறை இது என்பது குறிப்பிடத்தக்கது.