15 வயதான சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் கைது
Nila
2 years ago
15 வயதான சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்டத்தின் ஹிதோகம பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி சந்தேக நபருடன் காதல் உறவை வைத்திருந்ததாகவும், ஹிதோகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வயிற்றில் ஏற்பட்ட நோவு காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்ற போது, சிறுமியை பரிசோதித்த வைத்தியர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைத்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.