பதவி இழந்து அலையும் கோட்டாவிற்கு இப்படி ஒரு நிலையா?

Kanimoli
2 years ago
பதவி இழந்து அலையும் கோட்டாவிற்கு இப்படி ஒரு நிலையா?

கோட்டாபய தாய்லாந்து புகெட் விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து சென்று இறங்கவிருந்த சமயத்தில் , அங்கு அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் அதிகமாக குழுமியிருந்தத நிலையில் , அவரது பயணத்தை வேறு திசையில் மாற்ற அறிவுறுத்தல் விடுபடப்பட்டது.

அதன் பின்னர் தாய்லாந்து தலை நகரான பாங்காக்கிலுள்ள டொன் முவங் சர்வதேச விமான நிலையத்துக்க்கு விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.

இந்த விமான பயணத்துக்கு சிங்கப்பூரிலிருந்து சார்ட்டர் வகை விமானமொன்று வாடகைக்கு பெறப்பட்டிருந்தது. அதற்கான வாடகை அமெரிக்க டொலர் 30 ஆயிரத்தை தாண்டியிருந்தது.

அதாவது இலங்கை பணத்தில் 1 கோடி 6 லட்சம் ரூபாய் அளவாகும். விமானம் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்க முடியாமல் போனதால் , 1 மணி நேரத்துக்கு மேலதிகமாக கோட்டாவுக்கு விமானத்திலேயே இருக்க வேண்டி வந்தது.

டொன் முவங் விமான நிலையத்தில் விமானத்தை தரையிறக்க உத்தரவு கிடைக்கவும் வெகு நேரம் எடுத்ததால் , அங்கும் நீண்ட நேரம் எடுக்க வேண்டியிருந்தது.

இப்படியான ஒரு இக்கட்டான நிலையில் அதிர்ந்து போன தாய்லாந்து அரசு , கோட்டா தங்குமிடத்தை ரகசியமாக வைத்திருக்கவும் , அவரை பாதுகாக்க சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் சிலரை நியமிக்க முடிவெடுத்துள்ளது. அத்தோடு அவரை வௌியில் தலைகாட்ட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.