நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாது - சரத் வீரசேகர
இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைத்துக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
சீனா யுவான் வோங் -05 கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்ய முயற்சிப்பது சர்வதேசத்தின் மத்தியில் இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுவான் வோங் கப்பல் விவகாரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அழுத்தம் பிரயோகிப்பதை அவதானிக்க முடிகின்றதோடு இந்தியா மற்றும் அமெரிக்காவின் யுத்த கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரும் போது சீனா ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்