குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மனைவியை மிரட்டும் வீடியோக்களை அனுப்பிய கணவர்
தனது 5 வயது குழந்தையை கத்தியைக் காட்டி கொலை செய்யப்போவதாக மிரட்டும் வீடியோவை மனைவிக்கு அனுப்பிய தந்தையொருவர் தொடர்பில் குளியாப்பிட்டியவில் இருந்து செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும் மனைவியை பயமுறுத்தி திரும்ப அழைத்து வருவதற்காக குறித்த வீடியோ மனைவிக்கும், அவருக்கு தொழில் வாய்ப்பைப் பெங்றுக்கொடுத்து உதவிய நிறுவனத்துக்கும் அனுப்பப்பட்டது
குழந்தை மரண பயத்தில் அலறிய போது கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் குறித்தநபரைக் கைது செய்தனர்.
குறித்த குழந்தைக்கு இந்த சம்பவத்தால் சிறு கீறல்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் மனிதாபிமானமற்ற மிரட்டலால் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் பொலிசார் கூறுகின்றனர்.
குழந்தை தந்தையுடன் செல்ல மறுத்து, தாய் வரும் வரை உறவினருடன் செல்ல விரும்புவதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.