ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் வாரத்திற்குள்  விடுதலை

Prathees
2 years ago
ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் வாரத்திற்குள்  விடுதலை

சிறையில் இருக்கும் ரஞ்சன் ராமநாயக்க எதிர்வரும் வாரத்திற்குள் கண்டிப்பாக விடுதலை செய்யப்படுவார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீதிமன்றத்தை அவமதித்தமைக்கு வருத்தம் தெரிவித்து நீதிமன்றில் சத்தியப்பிரமாணப் பத்திரம் ஒன்றை ராமநாயக்க வழங்க உள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ராமநாயக்க எதிர்வரும் வாரத்தில் ஒரு நாள் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையும் அத்துடன் சிறைச்சாலை அத்தியட்சகரின் அறிக்கையும் தமக்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பான பரிந்துரையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது மிகவும் நியாயமானது என திரு.ராஜபக்ஷ ஊடகங்களில் தெரிவித்தார்.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பது மிகவும் நல்ல நடவடிக்கை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட  ரஞ்சன் ராமநாயக்க 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!