வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஹிக்கடுவ பிரதேசத்தில் ஒருவர் கைது
வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வருடன் ஒருவர் ஹிக்கடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை ஜயவர்தனபுர முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது துப்பாக்கியையுடன் அதற்கான மூன்று தோட்டாக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹிக்கடுவ களுபே பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் பலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிட்டியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வாரியபொல பிரதேசத்தில் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் திக்வெஹர பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் எனவும் அவர் வாரியபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.