பெருமளவான தங்க நகைகளுடன் ஒருவர் கைது

Kanimoli
2 years ago
பெருமளவான தங்க நகைகளுடன் ஒருவர் கைது

பத்தேகம – ஹல்பதொட்ட பகுதியில் மீட்டியகொட பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான தங்க நகைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

இதன்போது, கடந்த 2ஆம் திகதி மீட்டியகொட – அளுத்வல பகுதியில் உள்ள வீடொன்றை உடைத்து திருடப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதனை தொடர்ந்து 8 தங்க வளையல்கள், 5 கழுத்தணிகள், 3 மோதிரங்கள், 3 ஜோடி காதணிகள் மற்றும் 4 கையடக்கத் தொலைபேசிகளுடன் 31 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பத்தேகமவில் உள்ள அடகு நிலையம் ஒன்றில் இரண்டு தங்க நகைகளை அடகு வைத்துள்ளமையைப் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவத்தில் மேலும் சில நபர்கள் தொடர்புபட்டுள்ளனர் என்று பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்தேகநபர் பலப்பிட்டிய நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!