தோல்வியில் முடிந்த கோட்டாபயவின் முயற்சிகள் ரணிலின் உதவி

Kanimoli
2 years ago
தோல்வியில் முடிந்த கோட்டாபயவின் முயற்சிகள் ரணிலின் உதவி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமக்கு பாதுகாப்பாக வாழ்வதற்கு தஞ்சம் அளிக்கும் நாட்டைக் கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் திணறிக்கொண்டிக்கிறார்.

கடந்த ஜூலை 14 அன்று அவர் மாலைத்தீவில் இருந்து வந்தபோது, சிங்கப்பூர் அரசாங்கம் அவருக்கு இரண்டு வார சுற்றுலா விசாவை வழங்கியது. இது சாதாரணமாக அனைத்து பயணிகளுக்கும் பொதுவான முறையாகும்.

ஜனாதிபதியாக 31 மாதங்கள் மற்றும் 27 நாட்கள் பதவி வகித்த பின்னர் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அவரது சொந்த வேண்டுகோளின் பேரில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அந்த விசா புதுப்பிக்கப்பட்டது.

தப்பியோடியதன் பின்னணியில் வெளிவரும் தகவல்கள்
எனினும் இப்போது வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது, மேலும் சில காலம் சிங்கப்பூரில் தங்குவதற்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.

ஐக்கிய அரபு இராச்சியம் அல்லது சவூதி அரேபியாவில் புகலிடம் பெறுவதற்கான முயற்சிகள் பயனற்றதாகிவிட்டன. இதனையடுத்து அவர் பரபரப்பான நடவடிக்கையில் ஈடுபட்டார். இலங்கையிலும் அமெரிக்காவிலும் உள்ள தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தார்.

அவர் ஒரு நாட்டில் தஞ்சம் அடையும் வரை, பாதுகாப்பை கருதி, ஒரு குறுகிய பயணத்திற்காக தாய்லாந்தைத் தேர்ந்தெடுத்தார். அவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார் மற்றும் அவரது அனைத்து இயக்கங்களையும் கடுமையாகக் கட்டுப்படுத்தினார்.

தாய்லாந்துக்கு விஜயம் செய்வதற்கான ஏற்பாட்டுப் பணி, அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் கைகளில் விடப்பட்டது. அவர் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு சேவை செய்தபோது, அனைத்து நாட்குறிப்புகளையும் நிர்வகிப்பதை பொறுப்பாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில் கோட்டாபயவின் வேண்டுகோளுக்கு இணங்க, பண்டார, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளரான சமன் ஏகநாயக்கவைத் தொடர்பு கொண்டு, விசா நடைமுறைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடினார்.

விக்ரமசிங்கவின் தலையீட்டுடன் அவரின் செயலாளர் ஏக்கநாயக்க கவனம் செலுத்தும் செலுத்தினார்.

கொலோனைத் தொடர்பு கொண்டு, கோட்டாபய குழுவினருக்கு விசா வழங்குவதை உறுதிப்படுத்தும் விடயத்தை பேங்காக்கில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்

கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்திற்கு விஜயம் செய்வதற்கான விசா விண்ணப்பத்தை இலங்கை அரசாங்கம் ஆதரிப்பதாக அங்குள்ள அதிகாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தாய்லாந்து அரசாங்கத்தின் உயர் மட்டத்தை எட்டியது. ஒப்புதலும் பல நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது. அதில் கோட்டாபயவும் குழுவினரும் தாம் தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து வெளியில் செல்லக்கூடாது என்பதும் ஒரு நிபந்தனையாகும்.

இந்தநிலையில் தாய்லாந்து வீசாவுக்கான ஒப்புதல் கிடைத்த விடயத்தை கோட்டாபய ராஜபக்சவுக்கு தெரிவிக்குமாறு அவரின் முன்னாள் உதவியாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் மற்றும் முதல் பெண்மணியும் இன்னும் ராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருக்கின்றனர். எனவே தனிப்பட்ட பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு அதிகாரப்பூர்வ கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதனால், அவர்கள் ஆறு பேரும் பேங்கொக் சென்றவுடன், விசா பெற உரிமையை பெற்றனர். இந்தநிலையில் கோட்டாபய குழுவினர், தாய்லாந்துக்கு சென்ற பின்னர்,அவர்களுக்கான பயண ஒழுங்குகளை, அவரால் நன்மைப் பெற்ற வர்த்தகர்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம் ஆட்சியில் இருந்தபோது, பல வர்த்தகர்களுக்கு அவர் நன்மைகளை செய்திருக்கிறார். அவர்களே சிங்கப்பூரில் இருந்து அவர் தாய்லாந்து செல்வதற்கும்,பின்னர் தாய்லாந்தில் தங்கியிருப்பதற்கும் உதவுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!