10 வயது சிறுவனை காரால் மோதி விபத்துக்குள்ளாக்கிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தலைமறைவு
அளுத்கம, களுவாமோதர முல்லப்பிட்டி வீதி பகுதியில் காரை விபத்துக்குள்ளாக்கிய பேருவளை உள்ளூராட்சி சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 12ஆம் திகதி ஏழு மணியளவில் விபத்தில் சிக்கிய 10 வயது சிறுவன், அருகில் உள்ள சந்தையில் இருந்து தனது சகோதரியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக விசாரணை நடத்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
படுகாயமடைந்த குழந்தை பேருவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அந்த விபத்தில் குழந்தையின் கால் மற்றும் உடலின் பல பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது
விபத்து குழந்தையின் பாதுகாவலர்கள் அளுத்கம பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சந்தேகத்திற்குரிய பிரதேச சபை உறுப்பினரை கைது செய்வதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்குரிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினரின் வீட்டிற்கு பல தடவைகள் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆனால் அவர் காருடன் வீட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பேருவளை முல்லப்பிட்டி வெலேகெதர வீதியில் வசிக்கும் பேருவளை பிரதேச சபையின் பொதுஜன பெரமுன கட்சியின் பிரதிநிதி எனவும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாகியுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.