குறுகிய கால வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை - ஐக்கிய மக்கள் சக்தி

Kanimoli
2 years ago
 குறுகிய கால வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை - ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குறுகிய கால வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா,

தற்போதுள்ள நெருக்கடியை சமாளிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்னும் வேலைத்திட்டத்தை முன்வைக்கவில்லை என தெரிவித்தார்.

''அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒரு வேலைத்திட்டத்திற்கான கட்டமைப்பை முன்வைத்துள்ளார். ஆனால் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் மற்றும் தனது இலக்குகளை அடைவதற்கான காலக்கெடுவை கோடிட்டுக் காட்டவில்லை.

கடனை திருப்பிச் செலுத்துவதற்கும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் ஐக்கிய மக்கள் சக்தி 10 அம்ச வேலைத்திட்டத்தை வகுத்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை அவதானித்த பின்னரே இந்த வேலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டது” என்றார்.