அரசியல்வாதிகள் சட்டத்தை சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது - கர்தினால்
Prathees
2 years ago
அரசியல்வாதிகள் எந்த வகையிலும் சட்டத்தை சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது என பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என பாப்பரசர் பலமுறை அழைப்பு விடுத்துள்ள போதிலும் இலங்கையில் நீதி கிடைப்பது அரிதாகவே காணப்படுவதாகவும் அரசியல் தலைவர்கள் சட்டத்தில் தலையிடுவதே இதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இதனைத் தெரிவித்தார்.
இதன் இரண்டாம் கட்ட நிதியுதவி இன்று கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்றது.