கண்டியில் கோடீஸ்வர பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை
கண்டி அம்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகல் கண்டி பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கண்டி, அம்பிட்டிய சந்தியில் பல கட்டிடங்களை வைத்திருக்கும் 65 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே கொல்லப்பட்டார்.
இவரது கணவர் இறந்துவிட்டார், இரண்டு குழந்தைகளும் வெளிநாட்டில் உள்ளனர்.
இந்த பெண்ணின் வீட்டில் இருந்து மதியம் இரண்டு மணியளவில் நபர் ஒருவர் கையில் கூரிய ஆயுதத்துடன் வெளியே வருவதைக் கண்டதாகவும் அவரது கையிலும் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்துள்ளதாக அயலவர் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் குறித்த அண்டை வீட்டாரையும் அச்சுறுத்தியுள்ளார். பின்னர், கொலையாளி வெளியேறிய பிறகுஇ இ சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவி க்கப்பட்டுள்ளது.
கொலையை செய்த நபரை கண்டுபிடிக்க விசாரணையை பொலிசார் தொடங்கியுள்ள நிலையில் கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.