ரணிலின் ஆட்சிக்கு எதிராக நீர்கொழும்பில் 'ரணில் கோ கம' முன்பாக ஆர்ப்பாட்டம்
Kanimoli
2 years ago
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக்கு எதிராக நீர்கொழும்பு - தெல்வத்தை சந்தியில் 'ரணில் கோ கம' முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவு , மின்சாரக் கட்டண அதிகரிப்பு மற்றும் நீர்கட்டண அதிகரிப்பு, சிறுவர்களின் போசாக்கின்மை, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
அவசர காலச் சட்டத்தை நீக்க வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்ட காரர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரணிலின் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.