இந்திய-அமெரிக்க எதிர்ப்புக்களுக்கு எந்த காரணமும் இல்லை: சீன கப்பல் வர அனுமதி!
Prathees
2 years ago
சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டைக்கு வருவதைத் தடுப்பதற்கு குறிப்பிட்ட காரணங்களை வழங்குமாறு அமெரிக்க மற்றும் இந்தியத் தூதரகங்களுக்கு அரசாங்கம் அறிவித்த போதிலும், அவர்கள் முன்வைத்த காரணங்கள் திருப்தியடையாததால் யுவான் வாங் கப்பலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது.
நேற்றைய (14ஆம் திகதி) நிலவரப்படி இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டையில் இருந்து தென்கிழக்கே 5805 கடல் மைல் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்தது.
குறித்த கப்பல் கடந்த 11ஆம் திகதி அம்பாந்தோட்டைக்கு வரவிருந்த நிலையில், இந்தியாவின் எதிர்ப்பினால் கப்பல் வருவதில் தாமதம் ஏற்பட்டது.
இலங்கை இறையாண்மையுள்ள நாடு என்றும், அதன் விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் கடந்த வாரம் குற்றம் சாட்டியிருந்தது.