இனம் தெரியாத குழுவொன்றினால் மானிப்பாயில் வாள்வெட்டு தாக்குதல்
Kanimoli
2 years ago
இனம் தெரியாத குழுவொன்றினால் மானிப்பாயில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை 6:10 மணியளவில் உந்துருளியில் வந்த சிலரால் குறித்த வாள்வெட்டு நடாத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மானிப்பாய் சந்தை பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றின் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன் போது குறித்த விற்பனை நிலையத்தில் பணிபுரியம் தெல்லிப்பளையை சேர்ந்த 21 வயதுடைய நபர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.