இந்திய சுதந்திரதினத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து வருகின்றது “டோனியர் 228”:
Mayoorikka
2 years ago
இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இன்று இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.
இந்திய சுதந்திரதினமான இன்றைய தினம் குறித்த விமானம் வழங்கப்படுவது சிறப்பாக காணப்படுகின்றது.
இந்திய அரசு இலங்கை அரசுக்கு இதுபோன்ற 3 கண்காணிப்பு விமானங்களை வழங்க உள்ளது, இது அதன் முதல் விமானம் இதுவாகும்.
இந்த விமானம் கையளிக்கப்பட்டதன் பின்னர் ஐந்து இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கடந்த மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.