Yuan Wang 5 கப்பல் இலங்கை நோக்கிச் வந்துகொண்டிருப்பதால் தெற்கு ஆசியாவில் பதற்றம்

Kanimoli
2 years ago
   Yuan Wang 5 கப்பல் இலங்கை நோக்கிச் வந்துகொண்டிருப்பதால் தெற்கு ஆசியாவில் பதற்றம்

   Yuan Wang 5 எனும் சீனக் கப்பல் இலங்கையை நோக்கிச் வந்துகொண்டிருப்பதால் தெற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஏனெனில் Yuan Wang 5 சீனாவின் வேவுக்கப்பல் என இந்தியா நம்புகிறது.

இதனையடுத்து ஏற்பட்ட சச்சரவுகளை அடுத்து அந்தக் கப்பலின் வருகையைக் காலவரம்பின்றி ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொண்ட இலங்கை, பின்னர் அந்தக் கப்பல் வரலாம் என்று கூறியது.

இந்நிலையில் Yuan Wang 5 சீனக் கப்பல் நாளை இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் அணைவதற்கு இலங்கைத் துறைமுக அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

Yuan Wang 5 கப்பலால்   ஏற்படக் கூடிய எத்தகைய நிலைமையையும் சமாளிக்கத் தயாராக இருப்பதாய் இந்தியாவின் துறைமுக, கப்பல் போக்குவரத்து, நீர்நிலைகள் அமைச்சர் கூறியிருக்கிறார்.

எனினும் இந்தியா எத்தகைய நடவடிக்கையை எடுக்கும் என்பது பற்றி அவர் விளக்கம் தரவில்லை. தமது நாட்டின் பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள்காட்டி இந்தியா தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.

அதேவேளை எண்ணெய் நிரப்பவும், சரக்கு ஏற்றவுமே அந்தக் கப்பல் செல்வதாகவும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பரிமாற்றத்தில் தலையிட வேண்டாம் என்றும் கடந்த வாரம் சீனா இந்தியாவிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.