டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம்
Kanimoli
2 years ago
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 15 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 29 சதமாகவும்,
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 60 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 448 ரூபா 28 சதமாகவும் அதேசமயம் ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 430 ரூபா 86 சதமாக பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 379 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளதுடன் யூரோ ஒன்றின் கொள்வனவு விலை 364 ரூபா 31 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது