புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம்: காரணத்தை வெளியிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொறடா
Mayoorikka
2 years ago
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தற்போதைய அரசாங்கம் வழங்கியிருந்த வாக்குறுதிகளுக்கு அமையவே, தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக, எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.