முட்டை விலைக்கு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
Prathees
2 years ago
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை: அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
இன்று முதல் கோழி முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிர்ணய விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.