அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 08.09.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 08.09.2022

மேஷம்
அசுவினி: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். புதிய முயற்சி பலன் தரும்.
பரணி: நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும். உங்கள் எண்ணம் பலிதமாகும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நண்பர்களால் உங்கள் செயல் நிறைவேறும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: வருவாயில் இருந்த தடை விலகும். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
ரோகிணி: விவேகமுடன் செயல்பட்டு திட்டமிட்ட செயலை செய்து முடிப்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2: பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு கூடும். புதிய நட்புகளால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். வருமானத்தில் தடை உண்டாகும்.
திருவாதிரை: மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயலில் கவனம் தேவை.
புனர்பூசம் 1, 2, 3: திடீர் பயணம் ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். நெருக்கடியான நாள்.

கடகம்
புனர்பூசம் 4: வாழ்க்கைத் துணையின் உதவியுடன் தள்ளிப்போன சுப நிகழ்ச்சியை நடத்த முயல்வீர்கள்.
பூசம்: நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருவாய் உண்டு.
ஆயில்யம்: உங்கள் விருப்பங்கள் இன்று எளிதாக நிறைவேறும். வழக்கு வெற்றியாகும்.

சிம்மம்
மகம்: உங்களின் செல்வாக்கு இன்று வெளிப்படும். நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும்.
பூரம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள்.
உத்திரம் 1: உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: குலதெய்வ அருளால் முயற்சியில் லாபம் காண்பீர்கள். பொருளாதார நிலை உயரும்.
அஸ்தம்: நண்பர்களின் உதவியுடன் எதிர்ப்புகளை வெல்வீர்கள். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
சித்திரை 1, 2: எதிர்பாராத வருவாய் வந்து உங்கள் சங்கடங்களை நீக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்
சித்திரை 3, 4: உங்கள் செல்வாக்கு இன்று பிறருக்கு தெரியவரும். முயற்சியில் ஆதாய நிலை தோன்றும்.
சுவாதி: ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டால் முயற்சிகளில் லாபம் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: மனதை அலைபாய விடாதீர்கள். சேமிப்பில் ஆர்வம் கூடும்.

விருச்சிகம்
விசாகம் 4: உங்கள் நீண்ட நாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சியான நாள்.
அனுஷம்: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். யோகமான நாள்.
கேட்டை: நீங்கள் விரும்பியவற்றில் வெற்றி காண்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

தனுசு
மூலம்: பணம், நகைகளை கையாளுவதில் கவனம் வேண்டும். இல்லையெனில் இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
பூராடம்: உங்கள் எண்ணத்தில் ஒன்று நிறைவேறும். நண்பர்கள் உதவியால் ஆதாயம் காண்பீர்கள்.
உத்திராடம் 1: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளை சமாளிப்பீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: இனம் புரியாத குழப்பம் ஏற்படும். செயலில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும்.
திருவோணம்: மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் உண்டாகும்.
அவிட்டம் 1, 2: நினைத்ததை அடைய வேண்டுமென்று துணிச்சலுடன் செயல்படுவீர்கள்

கும்பம்
அவிட்டம் 3, 4: செலவுகள் கூடும். அரசு வழி முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும்.
சதயம்: ஆடம்பர செலவுகள் செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.
பூரட்டாதி 1, 2, 3: எதிர்பாராத செலவுகளால் பணத் தட்டுப்பாடு ஏற்படும்.

மீனம்
பூரட்டாதி 4: வருமானத்தில் உண்டான தடைகள் விலகும். மகிழ்ச்சியான நாள்.
உத்திரட்டாதி: உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் மீண்டும் வருவார்கள். ஆசை ஒன்று நிறைவேறும்.
ரேவதி: ஆதாயத்தை எதிர்பார்த்து ஒரு செயலில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.