மாணவர்கள் மண்டியிட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது

Prathees
2 years ago
மாணவர்கள் மண்டியிட்டமை தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளது

வெலிகம மாநகர சபைக்குட்பட்ட திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண வைபவம் ஒன்றில் உணவு உண்ண முற்பட்டதாகக் கூறப்படும் ஐந்து பாடசாலை மாணவர்களை மண்டியிட்ட சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 சம்பவம் தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான மாவட்ட மற்றும் பிராந்திய சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை கோரவுள்ளதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க  தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு மாணவர்கள் முறைப்பாடு செய்தால் விசாரணை நடத்தப்படும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பான சம்பவம் தொடர்பில் வெலிகம மாநகர சபையின் தலைவர் யமுனா காந்திஇ

மாணவர்களுடன் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாநகர சபைக்கு அருகில் வசிக்கும் மாணவர்கள் மண்டியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெலிகம மாநகர சபைக்குட்பட்ட விழா மண்டபத்தைச் சுற்றியிருந்த சிலர் அந்த இடத்திற்குள் நுழைந்து பலவந்தமாக உணவுகளை எடுத்துச் சென்றதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நகரசபையின் தலைவர் தெரிவித்தார்.

இதன்படிஇ குறித்த நபர் மற்றும் மாணவர் குழுவினர் அவர்களது ஊழியர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக வெலிகம மாநகர சபையின் தலைவர் யமுனா காந்தி மேலும் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.