சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால் மாத்திரமே ஆதரவு; மைத்திரி

Mayoorikka
2 years ago
சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால் மாத்திரமே ஆதரவு; மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் அனுமதியின்றி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ளதாக கட்சித்தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பட்டினி உள்ளிட்ட பொது மக்களின் துன்பங்களில் இருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டால் மாத்திரமே அமைச்சுப் பதவிகளை பெற்று ஆதரவு வழங்குவது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

அந்த முடிவுகளுக்கு மாறாக அரசு வழங்கும் பதவிகளை ஏற்க நாங்கள் தீர்மானிக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்கள் தமது சொந்த நலனுக்காக அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டமைக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார்.

மேலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று, கட்சியின் அங்கீகாரம் இன்றி, தன்னிச்சையாக அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வது, தாய்நாட்டிற்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்களின் சாதனைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் மைத்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.