அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 11.09.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 11.09.2022

மேஷம்
அசுவினி : திடீர் செலவுகளை சந்திப்பீர்கள். ஒரு சிலர் குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வீர்கள்.
பரணி : உறவினர்களுக்காக அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
கார்த்திகை 1 : பணத்தைக் கையாளுவதில் கவனம் தேவை. புதிய முயற்சி எதுவும் இன்று வேண்டாம்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ரோகிணி: குடும்பத்தில் உறவினர் வழியே லாபம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.
மிருகசீரிடம் 1, 2: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நினைத்ததை சாதிப்பீர்கள்

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : புதிய தொழில் தொடங்குவது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.
திருவாதிரை : அந்நியரின் உதவியுடன் நீண்ட நாள் பிரச்னை ஒன்றில் தீர்வு காண்பீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3: பெற்றோர் வழியே லாபம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

கடகம்
புனர்பூசம் 4 : இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.
பூசம் : குழப்பங்கள் விலகும். திட்டமிட்ட செயல் வெற்றி காண்பீர்கள்.
ஆயில்யம் : சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். குல தெய்வ அருளால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

சிம்மம்
மகம் : உங்கள் செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாறும்.
பூரம் : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் தடை உண்டாகும். அமைதி காப்பது நல்லது.
.உத்தரம் 1 : பயணத்தில் எச்சரிக்கை தேவை. வாகனத்தின் வழியே செலவு ஏற்படும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னை நீங்கும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
அஸ்தம் : தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை தீரும். வாழ்க்கைத் துணை வழியே மகிழ்ச்சி காண்பீர்கள்
சித்திரை 1, 2 : மற்றவர் ஆதரவுடன் உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

துலாம்
சித்திரை 3, 4 : உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகி உற்சாகம் ஏற்படும்.
சுவாதி : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றியைக் காண்பீர்கள்.
விசாகம் 1, 2, 3: தடைகளை நீக்கி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும்.

விருச்சிகம்
விசாகம் 4 : புத்திரர்கள் நிலையில் உயர்வு தோன்றும். பூர்வீக சொத்து பற்றிய பேச்சு எழும்.
அனுஷம் : திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கேட்டை : பெற்றோர் ஆதரவுடன் நீங்கள் எண்ணியதை இன்று நிறைவேற்றி மகிழ்வீர்கள்

தனுசு
மூலம் : உறவினர் ஒருவரால் சங்கடம் ஏற்படும். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.
பூராடம் : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். நீங்கள் விரும்பியதை இன்று அடைவீர்கள்.
உத்திராடம் 1 : உங்கள் செயல்களில் தடைகளை சந்திப்பீர்கள். வீண் செலவு அதிகரிக்கும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : பொதுக்காரியம் ஒன்றில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். யோகமான நாள்.
திருவோணம் : பொதுநலப்பணியில் விமர்சனத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும் நாள்.
அவிட்டம் 1, 2 : உங்கள் எண்ணத்தை சகோதரர்கள் உதவியுடன் நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் பண நெருக்கடியை சரி செய்வீர்கள்.
சதயம் : தைரியத்துடன் நினைத்ததை செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
பூரட்டாதி 1, 2, 3 : எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். தந்தையின் ஆரோக்யத்தில் கவனம் தேவை.

மீனம்
பூரட்டாதி 4 : புதிய சிந்தனை மேலோங்கும். எதிர்காலம் குறித்த எண்ணத்துடன் ஒரு செயலைத் தொடங்குவீர்கள்.
உத்திரட்டாதி : குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள்.அமைதி தேவை.
ரேவதி : குடும்பத்தினருடன் வெளியில் சென்று வருவீர்கள். உங்கள் முயற்சி பலித்தமாகும்.