தென் மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் - பிரதி பொலிஸ் மா அதிபர் 

Prathees
2 years ago
தென் மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் - பிரதி பொலிஸ் மா அதிபர் 

தென் மாகாணத்தில் கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களுக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும் என தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜீனி மாதம் இருந்து தற்போது வரை  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடாத்தப்பட்டு வருகின்றது. சந்தேக நபர்களும் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.