எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் கண்டிப்பாக தேர்தலை நடத்த வேண்டும்: கர்தினால் ரஞ்சித் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

Prathees
1 year ago
எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் கண்டிப்பாக தேர்தலை நடத்த வேண்டும்: கர்தினால் ரஞ்சித் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் கண்டிப்பாக நடத்த வேண்டும் என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராகம ஸ்ரீ ஹிருதய தேவாலயத்தில் நேற்று (25) இடம்பெற்ற ஆராதனையின் போதே கர்தினால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் நடத்தப்பட்டால், தற்போதுள்ள அரசாங்கத்திற்கு ஜனநாயக ரீதியில் பதிலளிக்க மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கர்தினால் தெரிவித்தார்.

இன்று இந்த நாட்டில் நடுத்தர வர்க்கத்தினரும் வறுமையில் வாடியுள்ளனர். பெரும்பாலான மக்களுக்கு உணவு இல்லை.

உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் கோபுரங்கள் கட்டப்பட்டாலும், விமானங்கள் வராத விமான நிலையங்களை அமைத்தாலும் உணவின்றி பலர் வாழ்கின்றனர்.

ஆசியாவில் ஒரு அதிசயத்தை உருவாக்க, தலைவர்கள், கொழும்பு நகரத்தை கிறிஸ்துமஸ் சொர்க்கமாக மாற்ற விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் அதை சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே காட்ட விரும்புகிறார்கள். மக்களுக்கு கூரை இல்லை.

இருநூற்றி இருபத்தைந்து பேரும் பாராளுமன்றம் சென்று நல்ல உடை உடுத்தக் கூட முடியாத வகையில் முட்டாள் தனமான கதைகளைச் சொல்லி மக்களை முட்டாளாக்கி மாண்டிசோரி பிள்ளைகள் போல் நடந்து கொள்கின்றனர்.

ஒரு குழு மற்றவர்களை திருடர்கள் என்று அழைக்கிறது. மற்றவர்கள் அவர்களை திருடர்கள் என்று அழைக்கிறார்கள். எல்லோரும் திருடர்கள்.

இந்த நாட்டின் 8.3 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். அரிசி, தேங்காய் சம்போல் மற்றும் ஒரு காய்கறி. ஆனால் அமைச்சர்கள் மூன்று வேளையும் சாப்பிடுகிறார்கள். சுமார் நான்காயிரம் இளைஞர், யுவதிகள் போராட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதான் ஜனநாயகமா? தலைவர்கள் விருப்பப்படி தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்தால், அவர்கள் நாட்டுக்கு துரோகம் இழைத்து விடுவார்கள். ஜனநாயகத்தை காட்ட மக்களுக்கு தேர்தலுக்கு வாய்ப்பு கொடுங்கள். அது எங்களின் உரிமை என அவர் மேலும் தெரிவித்தார்.