ரஷ்யாவுடன் இணைக்கப்படவுள்ள 4 உக்ரைனிய நகரங்கள்: ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உற்சாகம்

Prasu
1 year ago
ரஷ்யாவுடன் இணைக்கப்படவுள்ள 4 உக்ரைனிய நகரங்கள்: ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உற்சாகம்

வாக்கெடுப்புகள் நடத்தப்பட்ட நான்கு உக்ரைனிய பகுதிகளையும் ரஷ்யாவுடன் வெள்ளிக்கிழமை இணைக்க இருப்பதாக கிரெம்ளின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஷ்ய ஆதரவாளர்கள் அதிகம் வசிக்கும் கிழக்கு உக்ரைனிய பகுதிகளை  சுதந்திர குடியரசு பகுதிகளாக ரஷ்யா அறிவித்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் தொடங்கியது.

தலைநகர் கீவ்-வை ரஷ்ய படைகள் கைப்பற்ற தவறியதை அடுத்து, கிழக்கு உக்ரைனிய பகுதிகளில் தீவிர கவனம் செலுத்த தொடங்கிய ரஷ்யா, கடந்த 23ம் திகதி தங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும் உக்ரைனிய பகுதிகளில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினர்.இதில் கெர்சனில் 87% வாக்குகளும், லுஹான்ஸ்கில் 98% மற்றும் டொனெட்ஸ்கில் 99% வாக்குகளும் Zaporizhzhia இல் 93% வாக்குகளும் ரஷ்யாவுடன்  இணைவதற்கு ஆதரவாக வழங்கப்பட்டு இருப்பதாக ரஷ்ய சார்பு அதிகாரி புதன்கிழமை தெரிவித்து இருந்தார்.

சுதந்திர குடியரசு பகுதிகளாக அறிவிக்கப்பட்ட Luhansk, Donetsk, Kherson மற்றும் Zaporizhzhia ஆகிய பகுதிகளில் நடப்பட்ட இந்த வாக்கெடுப்பில் ரஷ்ய வீரர்கள் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, ரஷ்யாவுக்கு ஆதரவான முடிவு கிடைத்துள்ள நான்கு பகுதிகளும் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக ரஷ்யாவுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் (டிமிட்ரி பெஸ்கோவ்) Dmitry Peskov தெரிவித்துள்ள தகவலில், கிரெம்ளினில் நடைபெறும் இணைப்பு விழாவில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கலந்து கொள்வார் எனவும், அதன் தொடர்ச்சியாக நகரங்கள் ரஷ்யாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிய பகுதியில் நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பை முற்றிலுமாக நிராகரித்துள்ள மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.அதே சமயத்தில் ரஷ்ய பகுதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்த தயங்க மாட்டேன் என ரஷ்ய ஜனாதிபதி புடின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.