அமைச்சரவைக்கு மேலும் சில அமைச்சர்கள் இன்று நியமனம்?

Prathees
2 years ago
அமைச்சரவைக்கு மேலும் சில  அமைச்சர்கள் இன்று நியமனம்?

மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (03) பதவியேற்க உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைத்து அமைச்சர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பதவிப் பிரமாணம் செய்யும் நேரம் குறித்து இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழியப்பட்ட போதிலும் அவர்களில் சிலர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் பாராளுமன்ற குழு கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வார நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தவிர, 21வது அரசியலமைப்பு திருத்தம் குறித்தும் இங்கு விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!