ஐ.நாவில் இலங்கைக்கு ஏற்படவுள்ள தோல்வி தொடரும் கமல் குணரத்னவின் சண்டித்தனம்

Kanimoli
2 years ago
ஐ.நாவில் இலங்கைக்கு ஏற்படவுள்ள தோல்வி   தொடரும் கமல் குணரத்னவின் சண்டித்தனம்

கொழும்பில் உயர் பாதுகாப்பு வலயங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவே கொண்டுவந்துள்ளார். அன்று செய்த அதே சண்டித்தனங்களையே அவர் தற்போதும் செய்து வருகிறார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ​இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அக்கட்சி எம்.பி ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள 51/1 தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தாலும், இதில் இலங்கைக்கு தோல்வியே கிட்டும்.

ரதுபஸ்வலயில் மக்கள் தண்ணீருக்காகப் போராடியபோது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டது யார்? கோட்டாபய ராஜபக்ஷ இல்லையா? அப்படி என்றால் நாளை மக்கள் உணவுக்காக வீதிக்கு இறங்கினால் அவர்கள் மீது அரசாங்கம் துப்பாக்கிச் சூடு நடத்துமா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!